செல்லப்பிராணிகளை விற்பனை செய்பவர்கள் விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் அறிவிப்பு


செல்லப்பிராணிகளை விற்பனை செய்பவர்கள் விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 4:26 AM IST (Updated: 8 Jun 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

செல்லப்பிராணிகளை விற்பனை செய்பவர்கள் விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

செல்லப்பிராணிகளை விற்பனை மற்றும் இனவிருத்தி செய்யும் நபர்கள் பிராணிகள் வதை தடுப்பு விதிகளை பின்பற்றி மாநில விலங்குகள் நல வாரிய அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பு தெரிவித்து உள்ளது. 

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் செல்லப்பிராணிகளை விற்பனை மற்றும் இனவிருத்தி செய்யும் நபர்கள் அல்லது அமைப்பினர் பிராணிகள் வதை தடுப்பு விதிகளை பின்பற்றி மாநில விலங்குகள் நல வாரிய அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் அதுபோன்ற நடவடிக்கைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ மேற்கொள்ளக்கூடாது. இதற்கு தமிழ்நாடு மாநில விலங்குகள் நல வாரியத்தின் இணையதளத்தினை அணுகலாம். மேலும் கொரோனா ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டு உள்ள செல்லப்பிராணிகள் சம்பந்தப்பட்ட நிலையங்கள் ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்ட உடன் மாநில விலங்குகள் நல வாரியத்திடம் பதிவு பெற்ற பின்னரே இயங்க அனுமதிக்கப்படும். இது தவிர கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கள் பராமரிப்பின் கீழ் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story