புதுவையில் மேலும் 7 கட்டுப்பாட்டு மண்டலங்கள்
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசித்து வந்த 7 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கல்மண்டபம் மாரியம்மன் கோவில் வீதி, பிள்ளையார்குப்பம்பேட் பிப்டிக் சாலை 3-வது மற்றும் 4-வது தெரு, புதுச்சேரி காமாட்சியம்மன் கோவில் வீதி, ரெட்டியார்பாளையம் திலகர் நகர் 4-வது குறுக்குத்தெரு (விரிவு) மற்றும் கணபதி நகர் 3-வது குறுக்குத்தெரு, தட்டாஞ்சாவடி வீமன் நகர் அய்யனார் கோவில் வீதி (வடக்குப்பகுதி), சாரம் கவிக்குயில் நகர் 5-வது குறுக்குத்தெரு ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் அனைத்து வாகன நடமாட்டம், பொது போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story