செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 135 பேர் கொரோனாவால் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 135 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 5:13 AM IST (Updated: 8 Jun 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 135 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கம் ராஜராஜன் தெருவில் வசிக்கும் 58 வயது ஆண், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி பகுதியில் வசிக்கும் 26 மற்றும் 22 வயது இளம்பெண்கள், மண்ணிவாக்கம் ஊராட்சியில் சண்முகா நகர் பகுதியில் வசிக்கும் 56 வயது ஆண், முல்லை நகரில் வசிக்கும் 36 வயது ஆண், கூடுவாஞ்சேரி பாலகிருஷ்ணா தெருவில் வசிக்கும் 40 வயது பெண், கூடுவாஞ்சேரி கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் 43 வயது ஆண், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 பேர், மறைமலைநகர் நகராட்சி பகுதியில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டடோரின் எண்ணிக்கை 1,854 ஆனது. இவர்களில் 785 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 63 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடன் சேர்த்து 15 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சியில் உள்ள முல்லை நகர் பகுதியில் வசிக்கும் 36 வயது ஆண், சோமங்கலம் மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் தனியார் ஆஸ்பத்திரி ஊழியரான 22 வயது வாலிபர் என 2 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 516 ஆனது. இவர்களில் 316 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்தனர். 196 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள பூச்சிஆத்திபேடு கிராமத்தைச் சேர்ந்த 61 வயது மருந்து கடை உரிமையாளர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் நேற்று பலியான மருந்து கடை உரிமையாளரின் 55 வயது மனைவி, கன்னிகைபேரை சேர்ந்த 30 வயது இளம்பெண், பெரியபாளையத்தை சேர்ந்தவர்களான 47 வயது மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், 67 வயது ஓய்வுபெற்ற தலைமை காவலர், 28 வயது வியாபாரி ஒருவர் என 5 பேருக்கு கொரோனா உறுதியானது.இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,329 ஆனது. இவர்களில் 682 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 12 பேர் உயிரிழந்தனர். 635 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story