பிள்ளையார்நத்தம், பொன்னகரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


பிள்ளையார்நத்தம், பொன்னகரம் பகுதிகளில்   நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Jun 2020 5:32 AM IST (Updated: 8 Jun 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பிள்ளையார்நத்தம், பொன்னகரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் பொன்னகரம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, என்.ஜி.ஓ.காலனி, தோட்டனூத்து, அடியனூத்து உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் காந்திகிராமம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதையொட்டி பிள்ளையார்நத்தம், மில்ஸ்காலனி, நி.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள்நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிலுக்குவார்பட்டி, சித்தர்கள்நத்தம், குண்டலபட்டி, சிறுநாயக்கன்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, மைக்கேல்பாளையம், அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பொன்னகரம், காந்திகிராமம், நிலக்கோட்டை ஆகிய துணை மின்நிலையங்களின் உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story