ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரம் கையில் ‘சீல்’ வைத்த பிறகே மாநிலத்துக்குள் செல்ல அனுமதி
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளியூரில் இருந்து வருபவர்களின் கைகளில் ‘சீல்‘ வைத்து பிறகே மாநிலத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
ஓசூர்,
கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்க கர்நாடக அரசு மாநில எல்லைப்பகுதிகளில் தீவிர கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு, மராட்டியம், குஜராத், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குள் பொதுமக்கள் வர வேண்டாம் என்று அந்த மாநில அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இ-பாஸ் அனுமதியுடன் கார் உள்ளிட்ட வாகனங்களில் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்பவர்கள், எல்லைப்பகுதியில் தடுக்கப்பட்டு அவர்களது முழு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர், அவர்களது கைகளில் ‘சீல்‘ வைக்கப்பட்டு மாநிலத்துக்குள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு செல்பவர்களை, அந்த மாநில அரசு தனிமைப்படுத்துகிறது.
இந்த பணிகளுக்காக, மாநில எல்லைப்பகுதியில், 200-க்கும் மேற்பட்ட மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு, பகலாக சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 கார்கள், கர்நாடக மாநிலத்திற்கு செல்வதாகவும், 1,500 முதல் 2 ஆயிரம் பேர் வரை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், கர்நாடக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் கர்நாடகம், மராட்டியம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதியுடன் தமிழகத்திற்கு காரில் வருபவர்கள் மட்டும், அவர்களது முழு விவரங்களை தமிழக எல்லையிலுள்ள சோதனைச்சாவடியில் பதிவு செய்து விட்டு, மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. கர்நாடகா எல்லையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது போன்று, தமிழக எல்லையிலும் கட்டுப்பாடுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Tags :
Next Story