வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி நடிகர் சோனி சூட் திடீர் ‘மகாத்மா' ஆகிவிட்டார் சிவசேனா தாக்கு
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததன் மூலம் நடிகர் சோனி சூட் திடீர் மகாத்மாவாகி விட்டார் என சிவசேனா தாக்கி உள்ளது.
மும்பை,
மும்பையை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் சோனி சூட். தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து உள்ளார். கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் தன்னால் இயன்ற நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.
இது தொடர்பாக அண்மையில் அவர் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து பேசினார்.
அவர் பாரதீய ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், ஊரடங்கால் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களை தனது ஏற்பாட்டில் பஸ்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக ஆளும் சிவசேனா சோனி சூட்டை விமர்சித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் வாராந்திர கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
சோனி சூட் திடீரென வெளிமாநில தொழிலாளர்கள் மீது அனுதாபம் கொண்டு திடீர் மகாத்மாவாகி இருக்கிறார். இதை எந்த புத்திசாலியும் நம்ப மாட்டார்கள்.
கொரோனா வைரஸ் நெருக்கடியில் பாரதீய ஜனதா அரசியல் ரீதியாக நிலைநிறுத்தி கொள்ள போராடியது. ஆனால் பாரதீய ஜனதா தலைவர்களால் உத்தவ் தாக்கரே அரசாங்கம் அடிக்கடி விமர்சிக்கப்படுவதை மக்கள் விரும்பாததால் அவர்கள் கடும் பின்னடைவை சந்தித்து உள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை, கொரோனா வைரஸ் பிரச்சினையை கையாண்ட விதம் மோடி அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் விரைவில் சோனி சூட்டின் பெயர் கேட்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கலாம். பாரதீய ஜனதாவின் நட்சத்திர பிரசார தலைவராக பீகார், உத்தரபிரதேசம், டெல்லிக்கு கூட செல்லக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story