திம்பம் மலைப்பாதையில் லாரியில் ஏற்றப்பட்ட மரக்கட்டைகள் சரிந்து விழுந்தது
லாரியில் ஏற்றப்பட்ட மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததால் திம்பம் மலைப்பாதையில் 3ம ணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. குறுகலான 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய ரோடாக திம்பம் மலைப்பாதை உள்ளதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நிறைந்த ரோடாக இந்த மலைப்பாதை உள்ளது.
மேலும் இந்த மலைப்பாதை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நிகழ்வாகிவிட்டன. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குஷால் நகரில் இருந்து கோவில்பட்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. நேற்று மதியம் 2 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 7-வது வளைவில் திரும்பும்போது இந்த லாரியில் இருந்த மரக்கட்டைகள் திடீரென சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்டு ரோட்டோரமாக நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ரோட்டில் விழுந்து கிடந்த மரக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் போக்குவரத்து தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Related Tags :
Next Story