பாம்பனில் சூறாவளி காற்றில் சேதமடைந்த படகுகளை தீ வைத்து எரித்த மீனவர்கள்


பாம்பனில் சூறாவளி காற்றில் சேதமடைந்த படகுகளை தீ வைத்து எரித்த மீனவர்கள்
x
தினத்தந்தி 8 Jun 2020 9:25 AM IST (Updated: 8 Jun 2020 9:25 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் பலத்த சூறாவளி காற்றில் சேதமடைந்த விசைப்படகுகளை மீனவர்கள் தீ வைத்து எரித்தனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் பகுதியில் கடந்த மாதம் 17-ந் தேதி நள்ளிரவில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகளும் மற்றும் ஒரு விசைப்படகும் சேதமடைந்தது. இதில் சில படகுகள் கடலில் மூழ்கின. பலத்த சூறாவளி காற்றில் பாம்பனை சேர்ந்த சேசு என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகு ஒன்று நங்கூரகயிறு அறுந்து பாம்பன் ரோடு பாலத்தை ஒட்டியுள்ள கற்கள் மீது மோதி கரை ஒதுங்கி கிடந்தது.

சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மீன்துறை அதிகாரிகளால் சேதமதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுஉள்ளது.ஆனால் இதுவரை படகுகளுக்கோ நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கோரிக்கை

இந்தநிலையில் பாம்பனில் பலத்த சூறாவளி காற்றில் சேதமாகி மராமத்து பணிகள் செய்து மீன் பிடிக்கவோ, பயன்படுத்த முடியாத படகுகளை மீனவர்கள் உடைத்து தீ வைத்து எரித்தனர். படகின் என்ஜினை மட்டும் கழற்றி கொண்டு சென்றனர். ராமேசுவரம் மற்றும் பாம்பனில் பலத்த சூறாவளி காற்றில் சேதமடைந்த அனைத்து படகுகளுக்கும் அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story