வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் தூய்மைப்பணிகள் தீவிரம்


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் தூய்மைப்பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 8 Jun 2020 9:39 AM IST (Updated: 8 Jun 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் தூய்மைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தை கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைப்பர்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயமும் மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலயம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல் உள்பட தூய்மைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து வேளாங் கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் கூறியதாவது:-

ஆலயம் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. அவ்வாறு திறக்கப்பட்டால் பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடை பிடிக்கும் விதமாக இடைவெளி விட்டு கோவிலுக்குள் நுழையவும், நுழைவு வாயில்களில் தானியங்கி கிருமி நாசினி தெளிப்பானும் அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story