நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் சிறை வார்டன் உள்பட மேலும் 19 பேருக்கு கொரோனா
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் சிறை வார்டன் உள்பட மேலும் 19 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் 12 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.
நெல்லை மாவட்டத்திற்கு மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்தும், சென்னையில் இருந்தும் வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மும்பை, சென்னையில் இருந்து வருபவர்களை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் போலீஸ் சோதனை சாவடியில் நிறுத்தி சோதனை நடத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே அனுப்பப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் ஒருவர் பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக பணியாற்றி வருகிறார். கொரோனா சிகிச்சை பெற்று 2 கைதிகள் சிறைக்கு வந்த நிலையில், இவருக்கு காய்ச்சல், சளி அதிகமாக இருந்தது. உடனே இவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோல் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 பேரின் குடும்பத்தினரும், அவர்களுடன் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்தது. இவர்களில் 341 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 44 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இறந்து உள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஆலங்குளம் அருகே உள்ள கீழபட்டமுடையார்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவருடைய குழந்தைக்கும் தொற்று உறுதியானது. மேலும் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த கார் டிரைவருக்கு தொற்று இருந்தது. இதில் அவரது குடும்பத்தினருக்கு நடத்திய பரிசோதனையில், அவரது தந்தைக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில் 85 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 18 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Tags :
Next Story