குளச்சல் அருகே முடங்கி கிடக்கும் பாலப்பணியால் விபத்து அபாயம்
குளச்சல் அருகே பாலப்பணி முடங்கி கிடப்பதாலும், சாலை சேதமடைந்து உள்ளதாலும் அடிக்கடி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாலப்பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்துகிறார்கள்.
குளச்சல்,
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் நெடுவிளை சந்திப்பு சாலை உள்ளது. குளச்சலில் இருந்து புறப்படும் அரசு பஸ்கள் இந்த சாலை வழியாக கருங்கல், மார்த்தாண்டம், இரையுமன்துறை, தேங்காப்பட்டணம், மிடாலம் போன்ற பகுதிகளுக்கு தினமும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஏராளமான தனியார் வாகனங்களும் செல்கின்றன.
இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது.
அதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நெடுவிளை-குப்பியந்தறை இடையே சாலையின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஒரு பகுதியில் பணி முடிந்த நிலையில் மறு பகுதியில் பாலப்பணி தொடங்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. இந்தநிலையில், குமரி மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ மழையால், அந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து, முடங்கி கிடக்கும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சாலைப்பணி குறித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
நெடுவிளை-குப்பியந்தறை இடையே சாலையில் தொடங்கப்பட்ட பாலப்பணி கடந்த 3 மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின்னரும் பணி தொடரப்படாமல் உள்ளது. அங்குள்ள சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் பெரும்சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பாலப்பணியை மீண்டும் தொடங்கி முடிக்காவிட்டால் பாலம் அருகில் பொதுமக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story