திண்டுக்கல்லில் சிறுதொழில் செய்யும் 10 பேருக்கு வணிக கடன் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ் வழங்கினார்
திண்டுக்கல்லில் சிறுதொழில் செய்யும் 10 பேருக்கு வணிக கடன் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைமை கிளையில் புதுப்பிக்கப்பட்ட நிர்வாகக்குழு கூட்ட அரங்கத்தை முன்னாள் மேயரும், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வி.மருதராஜ் திறந்து வைத்தார். பின்னர் சிறுதொழில் செய்யும் 10 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் சிறு வணிக கடன் தொகைக்கான காசோலைகளை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பி.எம்.முருகேசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எம்.வீரமார்பன், மேலாண்மை இயக்குனர் வெங்கட்லட்சுமி, துணை தலைவர் லெனின் சுதாகர், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் வெ.பாரதிமுருகன், துணைத்தலைவர் வி.டி.ராஜன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story