நாகை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்வு


நாகை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 Jun 2020 5:50 AM IST (Updated: 9 Jun 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.

நாகப்பட்டினம், 

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த 63 வயது பெண், நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த 49 வயது பெண், 21 வயது ஆண், கீழ்வேளூரை அடுத்த திருக்கண்ணங்குடி பகுதியை சேர்ந்த 23 வயது ஆண், வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியை சேர்ந்த 60 வயது ஆண் என மொத்தம் 5 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.


Next Story