கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்டோவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் டிரைவர்
ஆண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்டோ டிரைவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி, மேலத்தெருவை சேர்ந்தவர் மல்லிகாஅர்ஜூனன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மல்லிகா அர்ஜூனன் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அதே நேரத்தில் அவர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். தனது ஆட்டோவில் தண்ணீர் நிரப்பிய குடத்தை கட்டி வைத்து, அதில் இருந்து குழாய் இணைத்து பயணிகளை ஏற்றும் முன்பு அவர்களை சோப்பு போட்டு கை கழுவ அறிவுறுத்தி வருகிறார். கைகளை கழுவிய பின்னரே ஆட்டோவில் ஏற அனுமதிக்கிறார். ஆட்டோவில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்களை ஒட்டி வைத்துள்ளார். இவரின் நடவடிக்கையை ஆட்டோவில் பயணிக்கும் மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story