சீனாவுடன் எல்லை பிரச்சினை நாட்டின் சுயமரியாதையில் சமரசம் கிடையாது ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
இந்தியா- சீனா எல்லை பிரச்சினையில் நாட்டின் பெருமை மற்றும் சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
மும்பை,
மராட்டிய பாரதீய ஜனதாவின் ஜன சம்வத் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வீடியோகான்பரன்சிங் மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான எல்லை பிரச்சினை நீண்ட காலமாக இருந்துவருகிறது. அதை விரைவில் தீர்க்க விரும்புகிறோம். சீனா உடனான பேச்சுவார்த்தை ராணுவ மற்றும் ராஜதந்திர மட்டத்தில்நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 6-ந் தேதி நடந்த பேச்சுவார்த்தை சாதகமாக இருந்தது.
மோதலை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
நாட்டின் தலைமை வலுவான கரங்களில் உள்ளதைநான் மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவின் பெருமை மற்றும் சுயமரியாதையில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
இந்தியா- சீனா எல்லையில் என்ன நடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கிறார்கள்.
நாட்டின் ராணுவ மந்திரி என்ற வகையில், நான் என்ன கூறினாலும், அதை நாடாளுமன்றத்திற்குள் தான் தெரிவிப்பேன். மக்களை தவறாக வழிநடத்த மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
மராட்டியத்தில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் குறித்துமத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆளும் சிவசேனா கூட்டணி அரசை கடுமையாக சாடினார். இதுபற்றி அவர் பேசியதாவது:-
தற்போதைய சூழலில் மராட்டியத்தில் அரசாங்கம் நடக்கிறது என்பதை விட சர்க்கஸ் நடப்பதை போல தான் தெரிகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் வலுவான தலைமை இருந்த போதிலும், இந்த அரசாங்கத்தின் இத்தகைய செயல்பாடு மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த கூட்டணியில் அர்ப்பணிப்பை விட அதிகாரத்திற்கான பேராசை தான் மேலோங்கி உள்ளது.
ஒரு கொரோனா நோயாளி 16 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சில் காத்திருப்பதை பார்க்கும் போது மராட்டியத்தில் அரசாங்கம் செயல்படுகிறதா என எண்ண தோன்றுகிறது.
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவி செய்த நடிகர் சோனி சூட்டை மராட்டிய அரசாங்கம் பாராட்டுவதற்கு பதிலாக விமர்சிக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை மராட்டிய அரசு உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடக அரசுகளிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story