நெல்லையில் இருந்து மதுரைக்கு பஸ்களில் சென்ற 129 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு பயணம்

நெல்லையில் இருந்து மதுரைக்கு பஸ்களில் சென்ற 129 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு பயணம்
x
தினத்தந்தி 9 Jun 2020 8:11 AM IST (Updated: 9 Jun 2020 8:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் இருந்து மதுரைக்கு 129 வடமாநில தொழிலாளர்கள் பஸ்களில் சென்றனர். அவர்கள் அங்கிருந்து சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர்.

நெல்லை, 

நெல்லையில் இருந்து மதுரைக்கு 129 வடமாநில தொழிலாளர்கள் பஸ்களில் சென்றனர். அவர்கள் அங்கிருந்து சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர்.

சிறப்பு ரெயில்

கொரோனா ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் தங்கி இருந்த தொழிலாளர்கள் பல்வேறு வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மதுரையில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு நேற்று பிற்பகல் ஒரு சிறப்பு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் நெல்லையில் தங்கி இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 129 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

உடல் வெப்ப பரிசோதனை

முன்னதாக அவர்கள் அனைவரும் நேற்று காலை நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஆம்னி பஸ்நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அரசு பஸ்களில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டு, மதுரை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் மற்ற மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுடன் சேர்த்து சிறப்பு ரெயிலில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story