எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட், முக கவசம் வினியோகம்
சேலம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று ஹால் டிக்கெட் மற்றும் முககவசம் வினியோகம் செய்யப்பட்டது.
சேலம்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கையாக மாணவ -மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் முககவசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 45,062 மாணவ, மாணவிகள் மற்றும் 1,425 தனித்தேர்வர்கள் என மொத்தம் 46,487 பேர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 532 தேர்வு மையங்களும், 56 சிறப்பு தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான ஹால்டிக்கெட் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதையொட்டி ஏராளமான மாணவ, மாணவிகள் ஆன்லைனில் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
இதே போல பள்ளிகள் மூலமாகவும் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் நேற்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக 10-ம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஹால் டிக்கெட் பெறுவதற்காக காலை 9 மணி முதலே மாணவிகள் பள்ளிக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் பள்ளி வளாகத்தில் அமர வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் மற்றும் முக கவசங்கள் ஆகியவற்றை வழங்கினர். அதாவது ஒவ்வொரு மாணவிக்கும் திரும்ப பயன்படுத்தும் வகையில் தலா 2 முக கவசங்கள் வழங்கப்பட்டன. இதனை கட்டாயம் உபயோகப்படுத்த வேண்டும் என மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். மேலும் மாணவிகளுக்கு தேர்வு மையத்தில் எப்படி செயல்பட வேண்டும்? என்பது குறித்து அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story