ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு  தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்
x
தினத்தந்தி 9 Jun 2020 8:59 AM IST (Updated: 9 Jun 2020 8:59 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது காந்திநகர். இப் பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரன். இவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று  புகுந்தது. வீட்டுக்குள் பாம்பு வருவதை கண்ட புவனேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வீட்டுக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 நீளமுள்ள பாம்பை பிடித்து ஊருக்கு வெளியில் உள்ள கண்மாய் பகுதியில் விட்டனர்.

அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் பதுங்கியிருந்த பச்சை பாம்பை பிடித்து கண்மாய் பகுதியில் விட்டனர்.

Next Story