உளுந்தூர்பேட்டை அருகே தனிமைப்படுத்தும் முகாமில் இருந்தவர்கள் தர்ணா போராட்டம்
உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை,
மாராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை இந்த மையத்தில் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சரியான முறையில் கழிப்பறை வசதி செய்து கொடுக்கவில்லை. மேலும் தங்கி இருக்கும் இடமும் சரியான முறையில் சுத்தம் செய்யப்படவில்லை.
இதனால் அவதி அடைந்த தனிமைப்படுத்தப்பட்டவர்கள் நேற்று முன்தினம் இரவு அந்த மையத்தின் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தாசில்தார் காதர்அலி விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story