தாழ்வாக செல்லும் மின் கம்பியால் அபாயம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் ராதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பக்கங்தான்குடி, செல்லையாபுரம், பரஞ்சோதி வாசல், எந்தகரை, தூக்கணாங்கரை, முத்தன்கோட்டை, நெட்டேந்தல், செட்டியேந்தல் ஆகிய கிராமங்களுக்கு ஆனந்தூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த கிராமங்கள் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் தாழ்வாகவும் கையில் தொடும் தொலைவிலும் இருப்பதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. கையை மேலே தூக்கினாலோ, சிறு குழந்தைகள் விளையாட்டுத்தனமாக வேறு ஏதேனும் பொருட்களால் கம்பியை தொட்டாலோ விபரீதம் ஏற்பட்டுவிடும். இதுதவிர பல இடங்களில் மின்கம்பங்களில் சிமெண்டு கான்கிரீட்டுகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் மற்றும் ராதனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராதனூர் ஊராட்சி தலைவர் ஜேம்ஸ் பீட்டர் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story