கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 12 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்


கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 12 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 9 Jun 2020 9:29 AM IST (Updated: 9 Jun 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தச்சூர், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 20 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 12 பேர் நேற்று குணமடைந்தனர். இதையடுத்து அவர்களை வீட்டுக்கு வழிஅனுப்பி வைக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சித்த மருத்துவர் சின்னசாமி கலந்து கொண்டு தமிழக அரசின் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, சுபகர குடிநீர், சானிடைசர் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை அந்த 12 பேருக்கும் வழங்கினார்.

இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் கைதட்டி உற்சாகமாக 12 பேரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பழமலை, நேரு, செந்தில்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story