கரூர், குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கரூர், குளித்தலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை,
கரூர், குளித்தலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
குளித்தலை காந்திசிலை அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில துணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய தொகுப்பிலிருந்து இடஒதுக்கீடு வழங்கவேண்டும், தனியார் நிறுவனங்களில் பட்டியல் இனத்தவருக்கும், உயர் கல்வி நிறுவனங்களில் முறையான இடஒதுக்கீடும் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கரூர்
இதேபோல கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆர்.எம்.எஸ் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அகரமுத்து, செய்தி தொடர்பாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story