கீரமங்கலம் பகுதியில் பலாப்பழம் விலை உயராததால் விவசாயிகள் கவலை
கீரமங்கலம் பகுதியில் பலாப்பழம் விலை உயராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கீரமங்கலம்,
கீரமங்கலம் பகுதியில் பலாப்பழம் விலை உயராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஊரடங்கால் பாதிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கிராம பகுதிகளில்உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி, பழங்கள், பூக்கள், தானியங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். மேலும் விற்க முடியாத காய்கறி, பழங்கள், பூக்களை சாலை ஓரங்களில் கொட்டினார்கள். இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு வாகனங்களில் கொண்டு சென்று பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பழங்கள், பூக்கள், வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியவில்லை. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், மேற்பனைக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விளையும் காய்கறிகளை ஊரடங்கு காரணமாக வெளியூர்களுக்கு கொண்டு செல்ல வசதிகள் குறைவாக உள்ளது என்று கூறப்பட்ட நிலையில், கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்தனர்.
விவசாயிகள் கவலை
தற்போது தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொடுத்துள்ள நிலையில் கீரமங்கலம் பகுதியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு காய், கனி, பூக்கள் வரத் தொடங்கி உள்ளன. ஆனாலும் ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் இருந்த அதே விலையில் தற்போது காய், கனிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. காய், கனிகள் போன்றவற்றின் விலை உயராததால் தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக விவசாயிகளிடம் இருந்து பலாப்பழங்கள் ஒரு கிலோ ரூ.4 முதல் ரூ.12 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வாழைத்தார்கள் குறைந்தபட்சம் ரூ.30 முதல் அதிகபட்சமாக ரூ. 100 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு உற்பத்திக்கான செலவுத்தொகை கூட கிடைக்கவில்லை என்று கவலையுடன் உள்ளனர்.
Related Tags :
Next Story