திருவாரூர் கமலாலய குளத்தில் மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு


திருவாரூர் கமலாலய குளத்தில் மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 4:50 AM IST (Updated: 10 Jun 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கமலாலய குளத்தில் மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவாரூர், 

திருவாரூர் கமலாலய குளத்தில் மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

மீன்பிடி குத்தகை

திருவாரூர் கமலாலயம் குளத்தில் குத்தகைக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை குளத்தில் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது மீன்பிடிப்பதற்காக குளத்தில் வலை வீசப்பட்டது. அந்த வலையில் உலோகத்தால் ஆன மீனாட்சி அம்மன் சிலை சிக்கியது.

இந்த சிலை அரை அடி உயரத்தில் அழகிய கலை நயத்துடன் காட்சி அளித்தது. இது செப்பு சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

அதிகாரியிடம் ஒப்படைப்பு

இந்த சிலையை மீன் பிடி குத்தகை எடுத்துள்ள முன்னாள் நகரசபை துணை தலைவர் செந்தில் உடனடியாக கோவில் செயல் அதிகாரி கவிதாவிடம் ஒப்படைத்தார். அவர் சிலையை திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்த சிலை ஜம்பொன்னால் ஆனதா? வேறு எங்கிருந்தோ திருடப்பட்டு குளத்தில் வீசப்பட்டதா? என பல்வேறு கோணத்்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் கண்டெடுக்கப்பட்ட மீனாட்சி அம்மன் சிலையை போலீசார் திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story