திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நடந்தது


திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 10 Jun 2020 4:56 AM IST (Updated: 10 Jun 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ.7,500-ம், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் கொரோனா நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருத்துறைப்பூண்டி, குடவாசல்

இதேபோல் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ரகுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் லட்சுமி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்ரவேலு முன்னிலை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் பேசினார்.

நீடாமங்கலம், மன்னார்குடி

நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஐமாணிக்கம் தலைமை தாங்கினார். நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மன்னார்குடி ஒன்றியக்குழு சார்பில் 40 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை தாங்கினார். உள்ளிக்கோட்டையில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்னிலம்

நன்னிலம் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தீனகவுதமன் தலைமை தாங்கினார். பேரளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

Next Story