ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி ரெயில் மோதி பலி


ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 10 Jun 2020 5:59 AM IST (Updated: 10 Jun 2020 5:59 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி ரெயில் மோதி பலியானார்.

மும்பை,

மும்பை காந்திவிலி கிழக்கு குரார் பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் காந்திவிலியில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்தநிலையில் முதியவர் நேற்று முன்தினம் காலை ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் முதியவரின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் போரிவிலி ரெயில் நிலையம் அருகில் முதியவர் ஒருவர் ரெயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரெயில் மோதி உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து சென்ற ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த கொரோனா நோயாளி என்பது தெரியவந்தது. முதியவரின் குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா அல்லது ரெயில் மோதி விபத்தில் பலியானாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரெயில்வே போலீசார் கூறியுள்ளனர்.

Next Story