கோஷ்டி மோதல்; 3 பேர் கைது


கோஷ்டி மோதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 6:18 AM IST (Updated: 10 Jun 2020 6:18 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே நடந்த கோஷ்டி மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உப்புக்கோட்டை,

தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 25). கூலித்தொழிலாளி. அதே பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன் (55). இவர் நேற்று முன்தினம் இரவு மது அருந்துவிட்டு ரவிசங்கர் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருந்தார். இதனை கண்ட ரவிசங்கரின் தாய் ஜெயலட்சுமி மற்றும் அவரது சித்தப்பா முருகன் ஆகியோர் ராஜேந்திரனை சத்தம் போட்டு அனுப்பி உள்ளனர். இந்நிலையில், ரவிசங்கர் தனது குடும்பத்தினருடன் தோட்டத்துக்கு சென்று கொண்டு இருந்தபோது, ராஜேந்திரன் மற்றும் சிலர் அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்து ரவிசங்கர் அளித்த புகாரின் பேரில், ராஜேந்திரன், காமராஜ் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் காமராஜை போலீசார் கைது செய்தனர். அதுபோல் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், ரவிசங்கர், அவருடைய தம்பி விஜய் சங்கர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ரவிசங்கர், விஜய் சங்கர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story