அண்ணாநகர், அவனியாபுரம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக அண்ணாநகர், அவனியாபுரம் பகுதிகளில் இன்று மின்வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை அண்ணாநகர், தாசில்தார்நகர் பீடர், கோல்ச்சா பீடர் ஆகிய உயர் அழுத்த மின்பாதைகளில் உதய் திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிவாசல் தெரு, சிக்கந்தர்புரம், காமராஜர் தெரு, மவுலானா சாகிப்தெரு, எஸ்.என்.ஏ. அபார்ட்மெண்ட், வைகை காலனி மேற்கு, கிழக்கு, தேவர்நகர், அன்னை நகர், நியூ ஹெச்.ஐ,ஜி. காலனி, யானைக்குழாய், அல்ட்ரா கல்லூரி வீதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
அதேபோல அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர், ஜெயபார், சிட்டி 4 மற்றும் 5, பைபாஸ் சாலை முழுவதும், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம், பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர், திருப்பதி நகர், அண்ணாநகர், புரசரடி, ஜெ.பி. நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மாகாலனி, கணேசபுரம், மண்டேலாநகர், விமானநிலைய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை தமிழ்நாடு மின் வாரிய துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story