நெல்லையில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு


நெல்லையில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2020 7:18 AM IST (Updated: 10 Jun 2020 7:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லையில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

விடைத்தாள் திருத்தும் பணி

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வும், அதையொட்டி பிளஸ்-1 தேர்வுகளும் நடத்தப்பட்டது. இதில் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து பிளஸ்-1 விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 7 மையங்களில் இந்த பணி நடக்கிறது. இதில் 900 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கிருமி நாசினி தெளிப்பு

நேற்று விடைத்தாள் திருத்தும் பணி விரைவாக நடைபெற்றது. பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் பணியை தொடங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அறைகளிலும், பள்ளிக்கூட வளாகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதே போல் பணி முடிந்து சென்ற பிறகும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொசு ஒழிப்பு புகை மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது. நவீன எந்திரம் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் இந்த பணியை கண்காணித்தனர்.

பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணியை வருகிற 14-ந்தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விடுபட்ட பாடத்துக்கு அரசு உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story