நெல்லையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு தொற்று
நெல்லையில் மேலும் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்தது. தூத்துக்குடியில் 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
நெல்லை,
நெல்லையில் மேலும் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்தது. தூத்துக்குடியில் 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
400 ஆக அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மும்பை, சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா பரவியதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்தது.
இந்த நிலையில் மாநகரில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், வி.எம்.சத்திரம் மற்றும் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் பரவலாக 9 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர வெளியூரில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே 390 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 10 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்தது.
தென்காசியில் தொற்று இல்லை
இதில் ஏற்கனவே 344 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மீதமுள்ள 53 பேர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டார்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 106 ஆக நீடிக்கிறது. இதில் 86 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதால், மீதி 18 பேர் மட்டும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூத்துக்குடியில் 10 பேர்
தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னையில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை 355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று மேலும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு வந்தவர் ஆவார். மற்றவர்கள் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம், குலசேகரநல்லூர் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story