கொரோனா நோயாளிகளின் மருத்துவ கழிவுகளை சேமித்து வைக்கக்கூடாது ; கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீடுகள், அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகளை கையாளுதல், சேமித்தல், வெளியேற்றுதலில் உரிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் மற்றும் முகாம்களில் உள்ளவர்களிடம் இருந்து மருத்துவ கழிவுகள் உருவானால் அவற்றை தனியாக பிரித்து மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்படும் மஞ்சள் நிற கொள்கலன்களிலோ, பைகளிலோ சேகரித்து உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.
கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் உபயோகித்த கையுறைகள் மற்றும் முக கவசங்களை வெளியேற்றும் முன்பு 72 மணி நேரம் காகித பைகளில் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
பின்னர் பொது கழிவுகளுடன் வெளியேற்ற வேண்டும். அந்த முக கவசங்களை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் வெட்டி துண்டுகளாக்கிவிட வேண்டும். பிற மருத்துவ கழிவுகளுடன் கொரோனா நோயாளிகளின் மருத்துவ கழிவுகளை சேர்க்கவோ, சேமிக்கவோ கூடாது. கொரோனா நோயாளிகளின் மருத்துவ கழிவுகளை 24 மணி நேரத்திற்கு மேல் சேமித்து வைக்கக்கூடாது.
கொரோனா அறிகுறியுள்ள பணியாளர்களை பணிபுரிய அனுமதிக்கக்கூடாது. கொரோனா பாதிப்பில் இருந்து மீள மருத்துவ கழிவுகளை கையாளுவதற்கான இந்த வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story