சேலத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா


சேலத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jun 2020 9:13 AM IST (Updated: 10 Jun 2020 9:13 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்ட எல்லைகளில் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவால் 5 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து சேலம் வந்த பெண் உள்பட 2 பேர், மராட்டியத்தில் இருந்து சேலம் வந்த ஒருவர் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டம் ஏற்காடு, கெங்கவல்லி, அழகாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 7 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் தனிமை வார்டில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story