ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அரிய வகையான சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகதோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வனப்பகுதியில் அரியவகையான சாம்பல் நிற அணில்கள், புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.
இந்தநிலையில் இந்த வனப்பகுதியை சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சரணாலய பகுதி என்பதால் அடிக்கடி வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அடிக்கடி ரோந்து செல்வதால் வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடும் சம்பவங்கள் குறைந்துள்ளன.
கணிசமாக உயர்வு
தீவிர கண்காணிப்பு பணியின் எதிரொலியால் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் அரிய வகையான சாம்பல் நிற அணில்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தொடர் கண்காணிப்பு, அடிக்கடி ரோந்து காரணமாக இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது வனப்பகுதியில் மிக அதிக அளவில் ஆயிரக்கணக்கில் சாம்பல் நிற அணில்கள் உள்ளன” என்று கூறினார்.
Related Tags :
Next Story