செந்துறை- குன்னம் பகுதியில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை
செந்துறை- குன்னம் பகுதியில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
செந்துறை,
செந்துறை- குன்னம் பகுதியில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
2 குழந்தைகளின் தாய்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகள் ஜோதி(வயது 29). இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் சுப்ராயபுரம் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜோதி தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு கடந்த 3 மாதங்களாக தனது தந்தை வீடான ராயம்புரத்தில் வசித்து வந்தார். விஜய் கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூர் சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜோதி தனது தந்தையின் மாட்டுக்கொட்டகையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து, ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சில்லக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மல்லிகா(வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. மல்லிகாவிற்கு வலிப்பு நோயால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் சக்திவேலுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
மேலும் அவரது 2 அக்காள் மற்றும் தம்பிக்கு கண்பார்வை குறைபாடு உள்ளது. மல்லிகாவுக்கு குழந்தையும் இல்லை. வீட்டில் வறுமையான சூழ்நிலையே இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த மல்லிகா, வீட்டின் அருகே உள்ள ஓடையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த குன்னம் போலீசார் மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story