கடலூர் மாவட்டத்தில் 3 பெண்களுக்கு கொரோனா உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுத்தும், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடலூர்,
நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 489 ஆக இருந்தது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தது.
இதில் கடலூர் சண்முகம் பிள்ளைதெருவை சேர்ந்த பெண், குண்டுஉப்பலவாடி பகுதியை சேர்ந்த பெண், சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த 25 வயது பெண் ஆகிய 3 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள் 3 பேரும் கொரோனா பாதித்தவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அந்த 3 பகுதிகளிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்தது. நேற்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது வரை 460 பேர் குணமடைந்துள்ளனர். மற்றவர்கள் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இது வரை 12 ஆயிரத்து 921 பேருக்கு பரிசோதனை செய்ததில், 492 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 12 ஆயிரத்து 242 பேருக்கு பாதிப்பு இல்லை. 187 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும். நேற்று 291 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 478 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story