ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 12:23 PM IST (Updated: 10 Jun 2020 12:23 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் வீரமணிகண்டன்(வயது 27) கடந்த 7-ந் தேதி தேதி இரவு அவரது வீட்டின் அருகே சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் வீரமணிகண்டன்(வயது 27) கடந்த 7-ந் தேதி தேதி இரவு அவரது வீட்டின் அருகே சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை சம்பவம் குறித்து அவரது மனைவி புஷ்பராணி அளித்த புகாரின், பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் முன் விரோதம் காரணமாக வீரமணிகண்டனை கொலை செய்ததாக பெரம்பலூர் திருநகரை சேர்ந்த முருகானந்தம்(39), பெரம்பலூர் ஆலம்பாடி சாலை புதுக்காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் டால்டா என்கிற கண்ணன்(30), பெரம்பலூர்- அரணாரை பிரிவு சாலையை சேர்ந்த பாஸ்கர் மகன் பார்த்தா என்கிற பார்த்திபன்(24) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அய்யனாரை(20) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனை தொடர்ந்து 4 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story