மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 3,254 பேருக்கு கொரோனா 149 பேர் பலி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 149 பேர் பலியானார்கள்.
மும்பை,
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 149 பேர் பலியானார்கள்.
94 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாளில் மட்டும் மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 254 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94 ஆயிரத்து 41 ஆக அதிகரித்து உள்ளது.
இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 149 பேர் நோய் தொற்றுக்கு பலியானார்கள். இதில் 15 பேர் தானேயையும், 5 பேர் நவி மும்பையையும், 7 பேர் அவுரங்காபாத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மாநிலத்தில் இதுவரை ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 438 ஆக அதிகரித்து உள்ளது.
மராட்டியத்தில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்ைக, பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சத்தை தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
97 பேர் பலி
மும்பையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 1,567 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆயிரத்து 667 ஆக அதிகரித்து உள்ளது. இதே போல மும்பையில் புதி–தாக 97 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,857 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் மும்பையில் 798 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாகவும், 4 ஆயிரத்து 538 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.
மற்ற பகுதிகள் விவரம்
மராட்டியத்தில் மற்ற பகுதி–களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-
தானே மாநகராட்சி - 5,319 (146 பேர் பலி), தானே புறநகர் - 1,384 (23), நவி–மும்பை மாநகராட்சி - 3,895 (92), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 2,082 (36), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 629 (24), பிவண்டி மாநகராட்சி - 368 (12), மிரா பயந்தர் மாநகராட்சி - 1,043 (45), வசாய் விரார் மாநகராட்சி -1,487 (39), ராய்காட் - 783 (29),
பன்வெல் மாநகராட்சி - 792 (29), நாசிக் மாநகராட்சி - 570 (22), புனே மாநகராட்சி - 8,970 (405), பிம்பிரி சின்ஞ்–வட் மாநகராட்சி - 720 (17), சோலாப்பூர் மாநகராட்சி - 1,384 (105), அவுரங்காபாத் மாநகராட்சி - 2,108 (115), நாக்பூர் மாநகராட்சி - 776 (12).
Related Tags :
Next Story