மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று : சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 84 ஆக அதிகரிப்பு
புதுச்சேரியில் நேற்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனைகளில் 72 பேர், வெளிமாநிலத்தில் புதுவையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 75 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவமனையில் 8 பேரும், ஜிப்மரில் 4 பேரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவார்கள். நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது புதுவை மருத்துவமனைகளில் 82 பேர், மாகியில் 2 பேர் என மொத்தம் 84 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
புதுவை மாநிலத்தில் இதுவரை மொத்தம் 145 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுவை அரசு மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 82 வயதுடைய முதியவர் கொரோனாவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கடந்த முறை நடந்த தவறுகள் நடைபெறாமல் இருக்க அவரின் குடும்பத்தினர் அனுமதி பெற்று அரசு சார்பில் உடல் மின்தகனம் செய்யப்பட உள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த முதியவர் கடந்த 6 நாட்களாக புதுவை அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் என 19 பேரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய உள்ளோம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும்போது அவர்கள் முழுமையான தகவல்களை கொடுப்பது இல்லை. எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தான் தற்போது புதுவையில் கொரோனா அதிகமாக பரவுகிறது. எனவே அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்யவேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு வந்தால்தான் புதுவையில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story