மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக மண்டல் நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை
மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக மண்டல் நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஆலோசனை நடத்தினார்.
மும்பை,
மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக மண்டல் நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஆலோசனை நடத்தினார்.
விநாயகர் சதுர்த்தி
கொண்டாட்டங்களுக்கு பெயர் போன மும்பை நகரத்தில், கொண்டாடும் பண்டிகைகளில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி. நாட்டின் மற்ற இடங்களை காட்டிலும் மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டும். விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் 10 நாட்களும் மும்பை நகரமே உற்சாக வெள்ளத்தில் திளைக்கும்.
தற்போது நாட்டை கதிகலங்க வைத்து வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் கடந்த 3 மாதமாக அனைத்து பண்டிகைகளையும் முடக்கி விட்டது.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும் கேள்விக்குறியாகி உள்ளது.
போலீஸ் கமிஷனர் ஆலோசனை
இது தொடர்பாக மும்பையின் பிரதான விநாயகர் மண்டல் நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் லாக்பாக் ராஜா, மும்பை ராஜா, கணேஷ் கல்லி, தேஜூகயா, சிந்தாமணி உள்ளிட்ட விநாயகர் மண்டல்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பாக மாநில அரசு பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றுவோம் என்றும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்தா–லும் அதன்படி நடப்போம் என மண்டல் நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.
ஏற்கனவே பிரசித்தி பெற்ற ஜி.எஸ்.பி. மண்டல் கடந்த மாதமே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story