6 மணி நேரம் உயிருக்கு போராடிய பரிதாபம்: தொழிற்சாலை எந்திரத்தில் கால் சிக்கி பெயிண்டர் பலி
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த பெயிண்டரின் கால் எந்திரத்தில் சிக்கியதால், 6 மணி நேரம் உயிருக்கு போராடிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் வசிப்பவர் சுரேந்தர் (வயது 26). இவர் மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை எந்திரத்தின் அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது, எந்திரத்தின் சக்கரத்தில் சுரேந்தரின் கால் சிக்கிக்கொண்டது. இதனால் அலறி துடித்த அவரை சக ஊழியர்கள் மீட்க முயன்றனர். ஆனால் 6 மணி நேரம் போராடியும் அவரை மீட்க முடியவில்லை. அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான சுரேந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தொழிலாளியின் உயிரை காப்பாற்ற தொழிற்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, அங்கு பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு ஒன்று கூடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பலியான சுரேந்தர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் முன்வைத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால், தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story