ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தொடக்கம்: நெல்லை மார்க்கெட்டில் கடைகள் இடிக்கப்பட்டன


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தொடக்கம்: நெல்லை மார்க்கெட்டில் கடைகள் இடிக்கப்பட்டன
x
தினத்தந்தி 11 Jun 2020 6:30 AM IST (Updated: 11 Jun 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் மார்க்கெட்டில் நேற்று கடைகள் இடிக்கப்பட்டன.

நெல்லை,

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தொடங்கப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் மார்க்கெட்டில் நேற்று கடைகள் இடிக்கப்பட்டன.

மார்க்கெட்

நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ்நிலையமும், வணிக வளாகமும் கட்டப்படுகிறது. இதற்காக பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதே போல் பொருட்காட்சி திடலிலும் வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கியது. இந்தநிலையில் நெல்லை டவுன் போஸ் மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகள் அனைத்தையும் இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு ரூ.10 கோடியே 67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இங்குள்ள கடைகளை உடனடியாக காலி செய்யவேண்டும் என்று மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு பல வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அங்குள்ள வியாபாரிகளுக்கு வேறு இடங்களில் கடை நடத்த மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கி தருவதாக கூறப்பட்டது.

கடைகள் இடிப்பு

இதைத்தொடர்ந்து மார்க்கெட்டில் உள்ள கடைகளை வியாபாரிகள், தாங்களாகவே நேற்று முதல் காலி செய்ய தொடங்கினர். இதனால் மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. சில கடைகளை உரிமையாளர்களே இடித்து அகற்றினார்கள்.

Next Story