நெல்லையில் கொரோனா பாதுகாப்பு கவச உடை அணிந்து பணியாற்றும் போலீசார்
கொரோனா தொற்று பரவுதலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நெல்லை,
கொரோனா தொற்று பரவுதலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில், நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள 7 சோதனைச்சாவடிகளில் போலீசார் இரவு பகலாக வாகன தணிக்கை செய்து வருகின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் போலீஸ் நிலையங்களுக்கு வருகிறவர்களும் கைகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் கட்டாயம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நெல்லை மாநகரத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டு உள்ளது. அவற்றை அணிந்தவாறு போலீசார் வாகன தணிக்கை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story