செங்கோட்டையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்து, அவர்களுக்கு இலவசமாக முக கவசம் கொடுத்து அனுப்பினர்.
செங்கோட்டை,
செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள் மற்றும் முக கவசம் அணியாமல் வரும் நபர்களை கண்டறிவதற்காக செங்கோட்டை தாசில்தார் கங்கா தலைமையில் ஆணையாளர் (பொறுப்பு) கண்ணன், சுகாதார அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் மகேஷ்வரன், வருவாய் ஆய்வாளர் லட்சுமணன், சுகாதார பணிகள் மேற்பார்வையாளர் முத்துமாணிக்கம் மற்றும் தூய்மை இந்தியா திட்டப்பணியாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளை நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் கடைக்காரர்களை எச்சரித்து அபராதம் விதித்தனர்.
இதையடுத்து முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்து, அவர்களுக்கு இலவசமாக முக கவசம் கொடுத்து அனுப்பினர். முக கவசம் அணியாமல் இருந்ததாக கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story