குமரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்வு


குமரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்வு
x
தினத்தந்தி 11 Jun 2020 7:31 AM IST (Updated: 11 Jun 2020 7:31 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.

மின்னல் வேகத்தில்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதேபோல் குமரி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 122 ஆக இருந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதில் சுகாதார பணியாளரும் ஒருவர்.

மேலும் ஒரு சுகாதார பணியாளர்

இந்தநிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் களியக்காவிளை சோதனைச்சாவடியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றிய தொலையாவட்டத்தைச் சேர்ந்தவரும் 42 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஒருவர். இவருக்கு கடுமையான காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து இவருக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவர் சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது பரிசோதனைக்காக வந்தவர்கள் மூலமாக இவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் தூத்தூரைச் சேர்ந்த 42 வயது ஆண், நெய்யூரைச் சேர்ந்த 42 வயது ஆண் ஆகியோர் கேரளா வழியாக குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு களியக்காவிளை சோதனைச் சாவடியில் சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ததில், அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

125 ஆக உயர்வு

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் நேற்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 ஆண்களும், ஒரு பெண்ணும் முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

அவர்கள் 5 பேரையும் டாக்டர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் 51 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story