தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணி பொதுமக்கள் பாராட்டு


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணி பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 11 Jun 2020 8:27 AM IST (Updated: 11 Jun 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

பிள்ளையார்பட்டி,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

விழிப்புணர்வு ஓவியங்கள்

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இருந்து வல்லம் சாலையில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழக மூலிகை பண்ணையில் இருந்து பல்கலைக்கழக நுழைவு வாயில் வரை சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிந்து, அதைத்தொடர்ந்து அதில் வர்ணங்கள் அடிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இந்த ஓவியங்கள் தமிழர்களின் பாரம்பரியமான கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகியவற்றை விளக்கும் விதமாகவும், சுற்றுப்புற தூய்மையை விளக்கும் விதமாக தூய்மை பாரத இயக்கத்தின் விழிப்புணர்வு ஓவியங்களும் வரையப்பட்டு வருகின்றன.

மூலிகை செடிகள்

மேலும் பொதுமக்கள் எளிதில்தெரிந்து கொள்ளும் வகையில் 50-க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள், இலைகள், தாவரத்தின் பெயர்கள், தாவரக்குடும்பம் மற்றும் அவற்றின் மருத்துவ பயன்பாடுகள் விளக்கும் விதமாகவும் ஓவியங்களை வரைந்து வருகின்றனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் நமது கலை, கலாச்சாரம், வேளாண்மை ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக வரையப்பட்டுள்ளது என்று தஞ்சை மாநகர பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற விழிப்புணர்வு ஓவியங்களை அரசு பொது சுவர்கள் மற்றும் பாலங்களில் வரைய வேண்டும். இதனால் அந்த இடம் தூய்மை அடைவதோடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாகவும் இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story