நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 85 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்,
திருச்செங்கோடு கூட்டப்பள்ளியை சேர்ந்த 49 வயது நிரம்பிய லாரி டிரைவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 77 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 7 பேர் நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து திருச்செங்கோட்டிற்கு வந்த 65 வயது முதியவர் மற்றும் அவரது 60 வயது மனைவிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மராட்டிய மாநிலத்தில் இருந்து நாமக்கல் வந்த 29 வயது நிரம்பிய இளைஞர் மற்றும் 50 வயது நிரம்பிய அவரது தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்து உள்ளது.
இவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதிகளில் பிளச்சிங் பவுடர் தூவுதல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Tags :
Next Story