திருவாரூரில் விளை பொருள் திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்


திருவாரூரில் விளை பொருள் திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2020 4:05 AM GMT (Updated: 11 Jun 2020 4:05 AM GMT)

திருவாரூரில் விளை பொருள் திருத்த சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

திருவாரூரில் விளை பொருள் திருத்த சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விளை பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட விவசாயத்தை பாதிக்கும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பவுன்ராஜ், தமிழ்ச்செல்வி, ரஜினிகாந்த், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சட்ட நகல் எரிக்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே நடந்த சட்ட நகல் எரிப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கே.பி.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் கதிரேசன், காரல்மார்க்ஸ், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர்கள் மணியன், பாலகுரு, வீரமணி, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல்

குடவாசல் பஸ் நிலையத்தில் நடந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சேகர், பொருளாளர் துரைமணி, எரவாஞ்சேரி பகுதி செயலாளர் ராஜதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் லட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் கெரக்கொரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story