திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 14 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது.
பள்ளி மாணவி
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 86 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் அருகே கூடூர் கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரும், திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு தனியார் தொலைக்காட்சி நிருபரின் உறவினர்கள் 5 பேரும் என 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் கூத்தனூரை சேர்்ந்த 19 வயது வாலிபர், பெங்களூருவில் இருந்து குடவாசல் வந்த வாலிபர், அந்தமானில் இருந்து குடவாசல் பகுதிக்கு வந்த மற்றொரு வாலிபர், லெட்சுமாங்குடியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், சென்னையில் இருந்து வந்த மன்னார்குடி பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள், கொல்லாபுரத்தை சேர்ந்த 43 வயதுடையவர், பேரளம் கோவிந்தகுடியை சேர்ந்த 42 வயதுடையவர் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
100-ஐ தொட்டது
இதனையடுத்து 14 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால்் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 100-ஐ தொட்டது. இதில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 53 பேர் மட்டுமே திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story