ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகரில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் 72 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகரில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து 72 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தென்னை விவசாயிகள் சங்கம், வாழ்க விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் விவசாய வேளாண் பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கிய மத்திய அரசை கண்டித்து அதனுடைய சட்ட நகலை எரிக்கும் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. ராமகிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன் தலைமை தாங்கினார். விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்தையா, காளிராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தெய்வானை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பெருமாள், மாதர் சங்கத்தின் நகர பொருளாளர் மனோன்மணி, விவசாய சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் சட்ட நகல் எரிக்கப்பட்டது. சட்ட நகல் எரித்ததாக 4 பெண்கள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
அதேபோல விருதுநகரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் சட்ட திருத்த நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story