நாகை பகுதியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் உள்பட 4 பேர் கைது


நாகை பகுதியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2020 10:06 AM IST (Updated: 11 Jun 2020 10:06 AM IST)
t-max-icont-min-icon

நாகை பகுதியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை பகுதியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணிடம் வழிப்பறி

நாகை நல்லியான்தோட்டம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகள் மகாலட்சுமி. இவர் நாகையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பணிமுடிந்து சர்அகமதுதெரு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து மகாலட்சுமி நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின்படி விசாரணை நடந்தது. இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் வழிப்பறி திருடர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் திருட்டு

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரை சேர்ந்த பூபாலன்(வயது22), சுனாமி நகரை சேர்ந்த பிரவீன்(21) ஆகிய 2 பேரும் மகாலட்சுமியிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பூபாலன் மற்றும் அக்கரைப்பேட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த வாசு(20), சீர்காழி பகுதியை சேர்ந்த சரவணகுமார்(19) ஆகிய 3 பேரும் சேர்ந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த மாதவன் என்பவரின் மோட்டார் சைக்கிளை சமீபத்தில் திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பூபாலன், பிரவீன், வாசு, சரவணகுமார் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story